Subscribe Us

சத்தான கோவைக்காய் பொரியல்


தேவையானவை:


கோவைக்காய் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

வறுத்துத் பொடிக்க:

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

தனியா - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - சிறிதளவு

மிளகாய் வற்றல்- 2

தோல் நீக்கிய நிலக்கடலை - 1 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல் - 1

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:

• கடலைப்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகாய் வற்றல், தோல் நீக்கிய நிலக்கடலையை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடித்து

கொள்ளவும்.

• கோவைக்காயை நன்றாக கழுவி நீளமாக வெட்டிக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெண் ஊற்றி சூடானதும் தாளிசப் பொருட்களைத் தாளித்து கோவைக்காயை போட்டு நன்றாக கிளறயும். 

• 5 நிமிடம்

கழித்து சிறிது நீர் விட்டு உப்பைச் சேர்க்கவும்.

• காய் நன்றாக வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

• சத்தான கோவைக்காய் பொரியல் ரெடி.

மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments