Subscribe Us

ஹம்மத் சிசானின் தேர்தல் அலுவலகம் சற்று முன்னர் நிந்தவூரி்ல் கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீனினால் திறந்து வைக்கப்பட்டது.

-Irshad Rahumathullah-


திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இலக்கம் 6 ல் போட்டியிடும் முஹம்மத் சிசானின் தேர்தல் அலுவலகம் சற்று முன்னர் நிந்தவூரி்ல் கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீனினால் திறந்து வைக்கப்பட்டது.அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வரலாற்றி முதன் முறையாக அமைச்சர் றிசாத் பதியுதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றது.

இன்று கிழக்கில் அரசியல் பயணத்தினை ஆரம்பித்துள்ள தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனை அப்பிரதேச மக்கள் தோலில் சுமந்து கொண்டு செல்வதை இதன் போது காணமுடிந்தது,கட்சியின் தேசிய அமைப்பாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்களை இஙகு காணலாம்.








Post a Comment

0 Comments