Subscribe Us

கமனலதென்ன மக்கள் சிங்கள அரசியல் வாதிகளின் மீது அதிருப்தியுற்று தங்கள் குறைகளினை மு.கா அரசியல் வாதிகள் முறையிட்டதுடன் மு.காவிற்கு வாக்களிப்பதாகவும் உறுதியளித்தனர்..!!



தெகியத்த கண்டியில் முஸ்லிம் காங்கிரசினால் நடாத்தப்பட்டு வருகின்ற சூறாவளிப் பிரச்சாரத்தின் மூன்றாவது நிகழ்வு இன்று (25-07-2015 ) சனிக் கிழமை 2 மணிளவில் தமனலதென்னவில் தெகியத்த கண்டி முஸ்லிம் காங்கிரசின் அமைப்பாளர் ரணவீர திஸாநாயக்க அவர்களின் தலைமையில் பெரும் திரளான மக்கள் பங்களிப்போடு நடாத்தப்பட்டு சற்று முன் வெற்றிகரமாக நிறைவுற்றது.

இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும்,மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளர் முஹம்மத் ரவூப்,முறுகலஸ்பிட்டிய விகாராதிபதி சங்கைக்குரிய பதவிய கமிட்ட தேரர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் விசேட உரையும் ஆற்றினர்.இதன் போது றுகலஸ்பிட்டிய விகாராதிபதி சங்கைக்குரிய பதவிய கமிட்ட தேரர் பேசுகையில் “தான் இந்த இடத்தில் இக் கிராமத்திற்கு பல உதவிகளினைச் செய்த அமைச்சர் ஹக்கீமிற்கு விசேடமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நங்கள் நன்றி மறுப்பவர்கள் அல்ல.நிச்சயாமாக யானைச் சின்னம் 2,9,10 இற்கு வாக்களித்து எங்களுக்கு உதவிய உங்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவோம்” என உணர்வு பூர்வமாக உரையாற்றினார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் தங்கள் பிள்ளைகள் பாடைசாலை செல்லும் வீதியினைத் திருத்தித் தருமாறும்,போதியளவு கல்வித் தகமை இருந்தும் தொழில் விடயங்களில் புறக்கணிக்கப்படுகின்ற இளைஞ்ஞர் யுவதிகளுக்கு தொழில் பெற்றுத் தர ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.மேலும்,சமூக சேவைகள் நிலையத்தின் சில விடயங்களில் புறக்கணிக்கப்பட்ட வயது முதிந்தவர்கள் தங்கள் கோரிக்கையினை முன் வைத்த போது,ஏன் இத்தனை நாளும் இதனை எங்களிடம் கூறவில்லை? எனக் கேட்ட மு.காவின் 2ம் இலக்க வேட்பாளரும் மாகாண அமைச்சருமான மன்சூர் உடனடியாக மாவட்ட சமூக சேவை நிலைய அதிகாரியினை தொடர்பு கொண்டு இம் மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றுமாறு கண்டிப்பான உத்தரவிட்டார்.உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம் என அக் குறித்த அதிகாரி மு.காவின் 2ம் இலக்க வேட்பாளரும் மாகாண அமைச்சருமான மன்சூரிடம் வாக்குறுதி அளித்தார்.

இந் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்பு இக் கிராமத்திற்கு சமூகம் அளித்திருந்த மு.கா பிரநிதிகளுக்கு விருந்துபசாரம் அளித்து தங்கள் விருந்தோன்பும் பண்பினையும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து நான்காவது பிரச்சாரக் கூட்டம் தெகியத்த கண்டியில் அமைந்துள்ள விஜபுரையில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.


Post a Comment

0 Comments