Subscribe Us

மோர்ட்டார் சைக்கிள் பந்தயத்தில் தூக்கியெறியப்பட்ட வீரர்: காயத்துடன் உயிர் தப்பினார்



மோர்ட்டார் சைக்கிள் பந்தய முன்னாள் உலகச் சாம்பியன் சசே ஸ்டோனெர். இவர் இன்று நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டார். அப்போது இவரது பைக் விபத்துக்குள்ளாகி குட்டிக்கரணம் அடித்தது. இதில் ஸ்டோனேர் காயத்துடன் உயிர்பிழைத்தார்.

‘சுஜூகா 8 அவர் விக்டோரி’ என்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் ஸ்டோனர் தனது அணியில் உள்ள மிக்கேல் வான் டெர் மார்க் மற்றும் டகுமி டகாஹாஷி ஆகியோருடன் கலந்து கொண்டார். பந்தயம் தொடங்கியதும் ஸ்டோனெர் தனது பைக்கிள் சீறிப்பாய்ந்தார். பைக் சிறிய தூரம் சென்றதும் ஒரு வளையில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து ரேஸ் பாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்குடன் ஸ்டோனெர் பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார். மீட்புப் படையினர் அவர் வந்து அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால், பின்னர் தனக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்து படத்தையும் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் உலச்சாம்பியனான ஸ்டோனெர் கடந்த 2012-ம் ஆண்டில் மோட்டுா ஜிபி பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments