இம்முறை தேர்தலிலே நானும் புத்தளத்தின் பல வருட அரசியல்வாதி என்றவகையிலே எமது ஊரின் அணைத்து அரசியல்வாதிகளையும் இணைத்து பொதுக்குளுவாகவே போட்டியிட முயற்சித்தேன். மேலும் எமது மாவட்டத்தில் பலகட்சிகள் பல பிரிவுகளாக பிரிந்து போட்டியிடுவதால் எமது மக்களின் வாக்குகள் பிரிந்து போகும் என்ற காரணத்தினால் நான் முஸ்லிம் கான்கிரசசையும் இணைத்து பெரும் எழுச்சியுடன் ஒரு கூட்டனியாகவே போட்டியிட முயற்சித்தேன்.
அனால் பல முயற்சிகள் செய்தும் இது பயனளிக்கவில்லை,மேலும் சில விஷமிகள் எமது ஊரில் எம்பி கிடைத்துவிடகூடாது அல்லது ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறவும் கூடாது என்ற நோக்கில் எமது மேலே கூறப்பட்ட திட்டக்களை முறியடித்துவிட்டனர்.
இறுதியில் எனக்கு எந்தக்கட்சியிலும் ஆசனம் கிடைக்காதவாறும் என்னை எந்த தேர்தலிலும் போட்டியிட வைக்காதவாறும் அவர்கல் திட்டம் தீட்டினார்கள்.
காரணம், இந்த சுயனலவாதிகளும் வேறு கட்சிகளின் முகவர்களும் பணத்திட்காகவும் வேறு பதவிகளுக்காகவும் சேரம் போனார்களே தவிர நான் சேரம் போகவில்லை.
இறுதியாக அல்லாஹ்வின் உதவியுடன் இறுதி தருணத்தில் எனக்கு அமைச்சர் ரிஷாத் பதிஉதீன் அவர்களின் உதவியினால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆசனம் உறுதிசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
எனக்கு ஆசனம் ஒன்றை பெறுவதில் ஏன் இந்த குழுக்கள் தயாரில்லை என்றால்.... அவர்களை விட எனக்கு எனது ஊரிலும் எனது மாவட்டத்திலும் இருக்கும் மக்கள் செல்வமே தவிர வேறு எதுவும் இல்லை.
அன்பார்ந்த மக்களே..........
எமது ஊருக்கு தேவை ஒரு எம்பி,
எமது ஊருக்கு தேவை அபிவிருத்திகள்,
எமது ஊருக்கு தேவை இளைஜர் யுவதிகளுக்கான தொளில்வாய்புக்கள்.
இவற்றை பெறுவதே எமது நோக்கமே தவிர ....
இதனை எந்த கட்சியினாலோ அல்லது எந்த நுட்பமுறைகளை பயன்படுத்தி இதனை பெற்றுக்கொண்டாலோ இது ஒரு வரலாற்று சாதனையாகவே கருதப்படும்.
யாரு இடித்தாலும் மாவாகினால் சரியே.......
அரசியல் கட்சிகள் பல வியூகங்களை பயன்படுத்தி போட்டியிடுகின்றனர் இது ஒரு ஓட்ட பந்தய போட்டி போன்றது. எந்த முறையை பயன்படுத்தி .., எப்படியான நுட்பங்களை உபயோகித்து ... இறுதியில் எவர் வெற்றி அடைவார் என்பதே இறுதி இலக்காகுமே தவிர வேறு ஒன்றுமில்லை.
நான் பழைய நவவி மாமாவாகவோ அல்லது நவவி காக்கவாகவோ இருந்தாலும் ..........
இம்முறை எனது தேர்தல் வியூகம் வெற்றியடையுமே தவிர தோல்வியடைய போவதில்லை.....
மேலும் என்னை குழிவெட்டியவர்கள் அவர்களோடு எந்த குழப்பங்கள் விடுப்பதையும் நீங்கள் காணமாட்டீர்கள். எனவே நண்பர்களே .. பெரியவர்களே... இறை ஊர் மக்களே .....
நீங்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் எனது 10 ம் இலக்கத்திற்கு புள்ளியிட்டு என்னை வெற்றியடைய செய்வீர்கள் என நம்புகிறேன்.
இப்படிக்கு
எம்.எச்.எம்.நவவி.


0 Comments