Subscribe Us

header ads

இளம் தலைமுறைக்கு தன்னம்பிக்கை ஊட்டிய சிறந்த கல்விமானை இந்த உலகம் இழந்திருக்கிறது- இரங்கல் செய்தியில் அன்வர் எம் முஸ்தபா


உலகின் தலை சிறந்த விஞ்ஞானியாவும், தொழில் நுட்ப வல்லுநராகவும், பாரத தேசத்தின் குடியரசுத் தலைவராகவும் இருந்து இந்திய தேசத்தை உலகின் பார்வையில் முன்னிறுத்தி இந்தியாவை  வல்லரசாக்கவேண்டும் என கனவு கண்டு அதற்காக தன்னை அர்ப்பணித்து உழைத்து வந்த டாக்டர் ABJ.அப்துல் கலாம் அவர்களின் மரண செய்தி என்காதை எட்டியபோது பேரதர்ச்சி அடைந்தேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும் சிம்ஸ் தனியார் பல்கலைகழக முதல்வருமான மென்பொருள் பொறியலாளர் அன்வர்.எம் .முஸ்தபா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

உலகின் நாலா பக்கங்களிலும் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெரும் மதிப்பு இருந்து  வந்தது. அவருடைய எளிமையான வாழ்க்கையும் அவரது எளிமையான பேச்சும் எல்லோரையும் கவரக் கூடிய ஒன்றாகும். வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து வந்த இந்த மகானின் இழப்பு பாரிய இழப்பே.
இளம் சந்ததியினரை  கனவு காணுங்கள் எனும் தனது கருத்தால் வெகுவாக கவர்ந்த இவர்,மாணவர்களுடன் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் எனலாம். பசுமை இந்தியாவை உருவாக்க பாடுபட்ட இவர் இயற்கையின் காதலனே.

இவரது இழப்பில் துவன்டு போகிருக்கும் இந்தியா தேசத்திற்கும் அன்னாரின் குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களை கவலையுடன் தெரிவிப்பதுடன்.அன்னாரின் மறுமைக்காகவும் பிராத்திக்கிறேன் என அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் இலக்கம் ஒன்றில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அதி உயர் பீட உறுப்பினர் அன்வர்.எம்.முஸ்தபா தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

சிம்ஸ் ஊடக பிரிவு 

Post a Comment

0 Comments