தொலைக்காட்சியில் வரும் நாடகங்களுக்கோ அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கோ உங்களது வீட்டுப் பெண்கள் மட்டும்தான் அடிமை என எண்ணுகிறீர்களா! அது தவறான கணிப்பாகும்.
இங்கிலாந்து நாட்டில் சுமார் இரண்டாயிரம் தொலைக்காட்சி ரசிகர்களிடம் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் அந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு ஆண்களும், பாதிக்கும் மேற்பட்ட பெண்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அடிமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கு மேல் தொலைக்காட்சிக்கு நேரம் ஒதுக்குகின்றனர்.
வடகிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிலும் அதிகபட்சமாக தொலைக்காட்சியோடு ஒன்றியிருப்பவர்கள். ஒரு வாரத்துக்கு சுமார் 26 மணி நேரத்தை இவர்கள் தொலைக்காட்சி முன் செலவிடுகிறார்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் ஒரு வேளை உணவு சாப்பிடும்போதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிப்பதாக தெரியவந்துள்ளது. ஐந்தில் ஒரு பகுதி மக்கள் வேலை செய்யும் இடங்களில் தொலைக்காட்சி பார்க்கின்றனர்.
இவர்கள் தங்களது வீடுகளில் குறைந்தது நான்கு வித்தியாசமான சாதனங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்து வருகின்றனர். தங்களது வாழ்நாளில் குறைந்தது பத்து ஆண்டுகளை தொலைக்காட்சிப் பெட்டியுடனே செலவு செய்கின்றனர்.
தொலைக்காட்சி பார்க்க விரும்பும் சாதனங்கள் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. பதினெட்டு முதல் இருபத்தி நான்கு வயதுடையவர்களில் மூன்று மடங்கு பேர் தொலைக்காட்சியை டேப்லட், அலைபேசி அல்லது லேப்டாப்பில் கண்டு ரசிக்கவே விரும்புகின்றனர். மொத்த இங்கிலாந்தில் இவர்கள் வெறும் பதினைந்து சதவிகிதமே என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments