Subscribe Us

header ads

கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் ஜனாதிபதி இல்லை


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டணியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை இடம்பெறவுள்ள பொது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவர் என்றதனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் பொது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொள்கின்ற கூட்டணியின் தேர்தல் செயற்பாடுகளில் தான் கலந்துகொள்வதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஆற்றிய விசேட உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய இம்முறை பொது தேர்தலில் ஜனாதிபதி சுயாதீமாக செயற்படவுள்ளார்.

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்தினால் நாளை இடம்பெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments