நடப்பு 'ரமலான்' மாதத்தில் 'கஃபதுல்லாஹ்'வில் 'இஃதிகாப்' இருப்பதற்கு ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலம், அரபி, உருது, பார்சி, துருக்கி உள்ளிட்ட 6 மொழிகளில் இவ்வசதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல பாகங்களிலிருந்தும் 'உமரா' செய்ய வந்துள்ள யாத்ரீகர்களுக்கு கஃபதுல்லாஹ்வில் 'இப்தார்' செய்வதற்கும் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சவூதி கெசட், மற்றும் 'சவூதி பிரஸ் ஏஜென்சி'க்கு பேட்டியளித்த 'ஹரமைன்'களின் 'இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி' இயக்குனர் 'பந்தர் அல்கசீம்' இதனை தெரிவித்துள்ளார்.
இதுதவிர, கஃபதுல்லாஹ்வின் எல்லையை சுற்றிலும் இலவச இன்டர்நெட் (WIFI) வசதியும் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார், அல்கசீம்.


0 Comments