கலவான பகுதியில் கணவனின் பையில் பெண் ஒருவரின் உள்ளாடை இருப்பதை கண்ட மனைவி கணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கணவன் கடைக்குச் சென்று மனைவிக்கு பாதனி ஒன்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்லும் வழியில் பொருட்கள் இருந்த பை பாரம் தாங்காமல் அறுந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபருக்கு வீதியால் சென்ற பெண் ஒருவர் உதவி செய்துள்ளதோடு, தனது பையையும் தவறுதலாக அவரிடம் விட்டுச் சென்றுள்ளார்.
இதை அவதானிக்காது குறித்த பையை வீட்டுக்கு கணவன் எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்துள்ளார். பையை திறந்து பார்த்த மனைவி, பையினுள் பெண்ணின் உள்ளாடை இருப்பதை அவதானித்துள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த மனைவி கணவன் மீது சந்தேகம் கொண்டு விறகு கட்டையால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான கணவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


0 Comments