ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குருணாகல் பேருந்து நிலையத்திற்கு எதிரில் நேற்று நடைபெற்றுள்ளது. வடமேல் மாகாணத்தை போதைப் பொருள் மாகாணமாக மாற்றுபவரை தடுப்போம்.
ஊழல்வாதிகளுக்கு உங்கள் விருப்பு வாக்குகளை வழங்கவேண்டாம்.
நாட்டுக்கு வேண்டாம் என்றால், வடமேல் மாகாணத்திற்கு எதற்கு என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

0 Comments