பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணித் தலைவர் அஞ்சேலோ மெத்தியூஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் பாகிஸ்தான் அணி 377 ஓட்டங்களை குவித்து, இலங்கை அணியின் இலக்கை கடந்து வெற்றியை தன தாக்கிகொண்டது.
இது பற்றி இலங்கை அணித் தலைவர் அஞ்சேலோ மெத்தியுஸ் கருத்து தெரிவிக்கையில், தீர்மானம் மிக்க இறுதி டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சேர்த்துக் கொள்ளப்படாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
மேலும் அவருக்கு பதிலாக அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தரிந்து கவுஷால் தனது பணியை சிறப்பாக செய்யவில்லை. இவையெல்லாம் இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments