Subscribe Us

header ads

‘மஹிந்த – மைத்திரி இணைந்துவிட்டனர், உடனே பதவி விலகு”

ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவை பதவி விலகுமாறு கோரி ஊவா மாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூட்டு சேர்ந்தால், அரசியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது ஒன்றிணைந்துள்ளபோதும் மாகாண முதலமைச்சர் இதுவரையிலும் அரசியலுக்கு விடைகொடுக்கவில்லை என்று கூறியே இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சுவரொட்டிகளில் ‘மஹிந்த – மைத்திரி இணைந்துவிட்டனர், உடனே பதவி விலகு” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments