Subscribe Us

தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்குகளை நடத்திய கொமர்ஷல் வங்கி


கொமர்ஷல் வங்கி அண்­மையில் கண்­டி­யிலும் குளி­யாப்­பிட்­டி­யிலும் மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களை சேர்ந்த சுமார் 260 தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு கருத்­த­ரங்­கு­களை நடத்தி உள்­ளது. நுண் சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­களை வலு­வூட்­டு­வதன் மூலம் தொழில் முயற்சி அபி­வி­ருத்­தி­களை நாடு முழு­வதும் ஊக்­கு­வித்து வரும் கொமர்ஷல் வங்­கியின் செயற்­றிட்­டத்தின் ஒரு அங்­க­மாக இந்­நி­கழ்­வுகள் இடம்­பெற்­றன.
“திரி­பல வியா­பார புபு­துவ” என்ற வங்­கியின் வேலைத்­திட்­டத்தின் மூலம் தொழில் முயற்சி ஆற்றல் மற்றும் அபி­வி­ருத்தி செய­ல­மர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. குளி­யாப்­பிட்­டிய, நாத்­தாண்­டிய மற்றும் பன்­னல ஆகிய இடங்­களின் கொமர்ஷல் வங்கி கிளை­களால் தெரிவு செய்­யப்­பட்ட 125 தொழில் முயற்­சி­யா­ளர்கள் குளி­யாப்­பிட்­டி­யவில் இடம்­பெற்ற கருத்­த­ரங்கில் பங்­கேற்­றனர்.
வங்­கியின் கட்­டு­கஸ்­தோட்டை, பேரா­தெ­னிய, பிலி­மத்­த­லாவ, அக்­கு­றணை, கண்டி நகர், மாத்­தளை, திகன ஆகிய கிளை­களால் தெரிவு செய்­யப்­பட்ட சுமார் 135 பேர் கண்­டியில் இடம்­பெற்ற செய­ல­மர்வில் பங்­கேற்­றனர்.
கூட்­டாண்மை பயிற்­று­விப்­பா­ளரும் ஆலோ­ச­க­ரு­மான தர்­ஷன வெளி­கல குளி­யாப்­பிட்டி நிகழ்ச்­சியில் வள­வா­ள­ராக பங்­கேற்றார். கொமர்ஷல் வங்­கியின் வட மேல் பிராந்­தி­யத்­திற்­கான பிராந்­திய முகா­மை­யாளர் அமல் அலஸ், குறிப்­பிட்ட வங்­கிக்­கி­ளை­களின் கிளை முகா­மை­யா­ளர்கள் மற்றும் கடன் அபி­வி­ருத்தி பிரிவின் அதி­கா­ரிகள் ஆகி­யோரும் இதில் பங்­கேற்­றனர். பயிற்­று­விப்­பா­ளரும் தொழில் முயற்சி ஆற்றல் அபி­வி­ருத்தி ஆலோ­ச­க­ரு­மான சந்­தன குண­வர்­தன வள­வா­ள­ராகப் பணி­யாற்­றினார். கொமர்ஷல் வங்­கியின் சிரேஷ்ட பிராந்­திய முகா­மை­யாளர் தெலக் ஷன் ஹெட்­டி­யா­ராச்சி, வங்­கிக்­கி­ளை­களின் கிளை முகா­மை­யா­ளர்கள் மற்றும் கடன் அபி­வி­ருத்தி பிரிவின் அதி­கா­ரிகள் ஆகி­யோரும் இதில் பங்­கேற்­றனர்.
நுண் சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்­கான இத்­த­கைய செயல் அமர்­வு­களை வங்கி ஏற்­க­னவே நாரம்­மல, காலி, மொன­ரா­கலை, வெள்­ள­வாய, பதுளை, பசறை, பண்­டா­ர­வளை, வெலி­மடை, வெலி­கம, கொக்­கலை, கராப்­பிட்­டிய, மாத்­தறை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, குரு­ணா­கல, யாழ்ப்­பாணம், வவு­னியா மற்றும் ஹிங்­கு­ராங்­கொடை ஆகிய இடங்­களில் ஏற்­க­னவே அண்மைக் காலங்­களில் நடத்­தி­யுள்­ளது.
வங்­கியின் விவ­சாய மற்றும் நுண் நிதி சேவைப் பிரி­வு­களில் இரத்­தி­ன­புரி, நாரம்­மல, கண்டி, அனு­ரா­த­புரம், கிளி­நொச்சி, பண்­டா­ர­வளை, வெள்­ள­வாய, ஹிங்­கு­ராங்­கொடை, கலே­வல, அச்­சு­வேலி, வவு­னியா மற்றும் திஸ்­ஸ­ம­கா­ராம ஆகிய இடங்­களில் அமைந்­துள்­ளன. புதிய வர்த்­தக முயற்­சி­களை தொடங்க அல்­லது இருக்­கின்ற வர்த்­த­கத்தை விஸ்­த­ரிக்க உதவி தேவைப்­ப­டு­கின்­ற­வர்­களை அடை­யாளம் கண்டு இந்­தப்­பி­ரி­வுகள் உதவி வரு­கின்­றன. தமது வர்த்­த­கத்தை எவ்­வாறு விருத்தி செய்­வது அல்­லது எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை எவ்­வாறு தீர்த்­துக்­கொள்­வது என்­பன போன்ற விட­யங்­க­ளிலும் உத­விகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.
2011 முதல் கொமர்ஷல் வங்­கியின் தொழில் முயற்சி ஆற்றல் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் மூலம் நாடு முழு­வதும் உள்ள 2100 சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்சிகள் நன்மை அடைந்துள்ளன. புதிதாக நடத்தப்பட்ட செயலமர்வுகளில் மாற்றங்களுக்கான அவசியம் சிலவேளை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் ஏன் தோல்வி அடைகின்றன? வர்த்தக உலகில் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது, தொழில் முயற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய விதிமுறைகள் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

Post a Comment

0 Comments