Subscribe Us

மெயின்ரோட்டில் படுத்திருந்த முதலையைப் பார்த்து அதிர்ந்த பெங்களூருவாசிகள் (PHOTOS)



வடக்கு பெங்களூரில் உள்ள சுல்தான்பால்யா மெயின்ரோட்டில் குளம் போல் தேங்கியிருந்த தண்ணீருக்குள் பிரம்மாண்டமான முதலை ஒன்று இருப்பதைப் பார்த்து பெங்களூருவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். 

ஆனால் பல நிமிடங்கள் அதை உற்றுக் கவனித்த பிறகுதான் அவர்களுக்கு அது தத்ரூபமாக செய்யப்பட்ட போலி முதலை என்பது தெரிய வந்தது. எதற்காக இப்படிச் செய்து எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற பாதசாரிகளின் கேள்விக்கு தத்ரூபமாக இந்த முதலையை வடிவமைத்த, சமூக அக்கறை கொண்ட கலைஞரான பாதல் நஞ்சுண்டசாமியின் பதில், ”இந்த சாலையின் அடியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து பல வாரங்களாக தன்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பலமுறை அரசு நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. அதனால்தான்...”

முதலை நீந்திக் கொண்டிருந்த அந்த குளத்தை தற்போது அரசு அதிகாரிகள் சரி செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பாதல் பதிவேற்றியுள்ளார். ’உங்கள் நூதன போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிதான் இது’ என்று நெட்டிசன்கள் நஞ்சுண்டசாமியைக் கொண்டாடுகின்றனர். 




Post a Comment

0 Comments