இந்தியா- வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மிர்புரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் அதிரடியாக விளையாடி ரன் குவித்தது, இந்திய பந்துவீச்சாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை மிஞ்சும் வகையில், துணை கேப்டன் வீராட் கோலி கீப்பராக களம் இறங்கியது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
44-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் விக்கெட் கீப்பர் தேவையில்லை என்று எண்ணிய தோனி, பவுண்டரி லைனில் பீல்டிங் செய்தார். அப்போது துணை கேப்டன் வீராட் கோலி பேடு கட்டிக்கொள்ளாமல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு பந்து தன்னைக் கடந்து செல்லவிடாமல் மடக்கினார். இது அனைவருடைய புருவத்தையும் உயரச் செய்தது.



0 Comments