Subscribe Us

பகவத் கீதை போட்டியில் வென்ற இஸ்லாமிய சிறுமி பிரதமருடன் சந்திப்பு



பகவத் கீதை போட்டியில் வென்ற 12 வயதான இஸ்லாமிய சிறுமி மர்யம் ஆசிப் சித்திக், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 


இஸ்கான் அமைப்பு நடத்திய பகவத் கீதை பற்றிய போட்டியில் மும்பையைச் சேர்ந்த மரியம் சித்திக்கி (வயது 12) என்ற இஸ்லாமிய மாணவி முதல் பரிசை வென்றார். 



இந்நிலையில், சிறுமி மர்யம் ஆசிப் சித்திக்கி, இன்று தனது பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தூய்மை இந்தியா ஆகிய திட்டத்திற்கு பிரதமர் மோடியிடம் தலா 11 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினார். கீதை போட்டியில் வெற்றி பெற்றமைக்காக சித்திக்கை பாராட்டிய மோடி, பல்வேறு மதங்களின் ஐந்து புத்தகங்களையும் பரிசாக வழங்கினார்.



இந்த சந்திப்புக்கு பின்னர் பிரதமர் மோடி டுவிட்டரில் இது குறித்து பதிவு செய்துள்ளார். “எனது இளைய தோழி மர்யம் ஆசிப் சித்திக்கை இன்று சந்தித்தேன். பல்வேறு மதங்களின் மீதான மர்யமின் ஆர்வம் அனைத்து இந்தியர்களுக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.” என்று மோடி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments