கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷ தேசியப் பட்டியில் மூலம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முற்படுவதாக, அண்மையில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஆட்சி அமையுமானால், கோட்டாபய தேசியப் பட்டியில் மூலம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக வாய்ப்புள்ளதாக, அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று கண்டிக்கு சமய நிகழ்வொன்றின் நிமித்தம் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் இது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அது பொய்யான தகவல் என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments