![]() |
File Picture |
20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சாகும் வரையில் உண்ணாவிரதப்
போராட்டமொன்றை நடாத்த தேசிய சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
20ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை
வலியுறுத்தும் வகையில் தொடர் சத்தியக் கிரக போராட்டத்தையும், சாகும்
வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றையும் மேற்கொள்ளத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தேவையான
நடவடிக்கைகளை இந்த வாரத்தில் மேற்கொள்ளத் தவறினால், போராட்டங்கள்
முன்னெடுக்கப்படும் என தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த
சாகர தேரர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது மேலும் தாமதிக்கப்படக் கூடாது,
அதனை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தல்
நடாத்த எவ்வித அவசியமம் கிடையாது. அரசாங்கம் தொடர்ந்தும் இதேவிதமாக
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
0 Comments