Subscribe Us

header ads

மெர்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு: அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை



உயிர்க்கொல்லி நோயான மெர்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான இரு வேறு மருந்துகளை கண்டுபிடித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இரு மருந்துகளில் ஒன்று நோய் வராமல் பாதுகாக்கும் என்றும், மற்றொரு மருந்து நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு இம்மருந்து கொடுத்து சோதனையிடப்பட்டது. இதில் கிடைத்த முடிவுகள் திருப்திகரமாக இருப்பதால் இனி வரும் காலங்களில் இம்மருந்துகளை மனிதர்களுக்கும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரான மேத்யூ பி ப்ரைமேன் கூறுகையில், “முதற்கட்டமாக கிடைத்துள்ள முடிவுகள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. இதன் மூலம் மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகளான REGN3051 மற்றும் REGN3048 என்ற இந்த மருந்துகள், மெர்ஸ் வைரசின் செயல்பாட்டை அழிக்கவல்லது” என்றார்.

Post a Comment

0 Comments