கணவர் இறந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது குழந்தையை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட தமிழ்ப்பெண் ஒருவர், 'மீண்டும் வந்து கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் ' என கூறியுள்ள வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் வசித்து வந்த தமிழ் பெண் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  குறித்தப் பெண் ஒருவரை திருமணம் முடித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்த வந்த நிலையில் குழந்தையை பெற்றுள்ளார்.  ஆனால் திருமணமான ஒரு மாதத்தில் அந்தப் பெண்ணின் கணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் தனது ஒரு வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக குறித்தப் பெண் தமிழில் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தளங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:–

'நானும், எனது குழந்தையும் சாகப்போகிறோம். நான் என் கணவர் இன்றி வாழ முடியாது. குழந்தை இல்லாமலும் என்னால் வாழ முடியாது. நான் என் கணவரை காண்பதற்காக போகிறேன்.

என் கணவர் இயற்கையாக இறந்திருந்தால், நான் பழி வாங்க மாட்டேன். அப்படி இல்லாதிருந்தால், நான் மீண்டும் வந்து பழி வாங்குவேன். ஆனால் இப்போது என் குழந்தையை கொன்று பழி வாங்குகிறேன். ஒரு குழந்தையை கொல்லும் வலி, பெற்றோருக்குத்தான் தெரியும்.


இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.