Subscribe Us

வெலே சுதா­விடம் நடிகை உத­யந்தி பணம் பெற்­றதாக குற்றச்சாட்டு


திரைப்­பட மற்றும் நாடக நடிகை உத­யந்தி குல­துங்­கவின் வங்கிக் கணக்கை முடக்­கு­மாறு கோரி கொழும்பு மேல் நீதி­மன்றம் பிறப்­பித்த உத்­த­ரவின் பிர­தி​யை சமர்­ப்பிக்­கு­மாறு இர­க­சியப் பொலி­ஸா­ருக்கு கொழும்பு நீதவான் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.
தனது வங்கிக் கணக்கை முடக் கும் நீதி­மன்ற உத்­த­ரவை இரத்துச் செய்­யு­மாறு கோரி உத­யங்கி குல­துங்க தாக்கல் செய்­துள்ள மனு நேற்று பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.
பிர­பல போதைப்­பொருள் வர்த்­தகர் வெலே சுதா­வுடன் உத­யந்தி பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்­பினை பேணி­ய­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.
வெலே சுதாவின் தொலை­பே­சியை சோதனை செய்­த­போது இந்த தகவல் வெளி­யா­ன­தாக பொலிஸார் கூறி­யுள்­ளனர்.அதன்­படி, உத­யந்தியின் வங்கிக் கணக்கில் நான்கு தட­வைகள் தலா ஒரு இலட்சம் என நான்கு இலட்சம் ரூபா வெலே சுதாவால் வைப்புச் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் உத­யங்­கியின் பிறந்த தினத்­திற்கு 50,000 ரூபா பரிசு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இர­க­சியப் பொலிஸார் தெரிவித்­துள்­ளனர்.
மேலும் உத­யந்தி தனது சகோ­தரி ஒரு­வரின் வங்கிக் கணக்கில் 100 இலட்சம் ரூபா வைப்­பி­லிட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் உத­யங்கி சார்பில் நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­த­துடன் உத­யந்­தியின் வங்கிக் கணக்கு முடக்க உத்­த­ரவை இரத்துச் செய்­யு­மாறும் கோரிக்கை விடுத்தார். அதன்­படி, வங்கிக் கணக்கை முடக்கி மேல் நீதி­மன்றம் பிறப்­பித்த உத்­த­ரவின் பிரதியை சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம், வழக்கினை ஜூலை 3 ஆம் திக திக்கு ஒத்திவைத்துள்ளது.

Post a Comment

0 Comments