ஊடகவியலாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் பணியாற்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்களின் உரிமையாளர்களின் கொள்கைகள் அல்லது நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் அதனை ஊடகவியலாளர்கள் மீதோ, படைப்பாளிகள் மீதோ திணிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு உள்ள சுதந்திரம் உலகில் வேறு நாடுகளில் செயற்படுத்தப்படுகிறது.
அரசாங்கம் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கிய சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை ஊடகவியலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 Comments