Subscribe Us

நாமல் ராஜபக்ஸ எனக்கு எதிராக சேறு பூசி வருகின்றார் – ரஞ்சன் ராமநாயக்க


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தமக்கு எதிராக சேறு பூசி வருவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

முகநூல் ஊடாக இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

வளர்ந்து வரும் அரசியல்வாதிகள் மீது நாமல் ராஜபக்ஸ சேறு பூசி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக மல்சா குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு இளம் அரசியல்வாதிகள் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஸவும் அவரது சகாக்களும் இணையத்தின் ஊடாக சேறு பூசல்களில் ஈடுபடுவதற்காக மாதாந்தம் 2 மில்லியன் ரூபா பணத்தை செலவிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் அவரது சகாக்களும் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகவே தாம் முன்னதாக கருதியதாகவும், மேல் மாகாணசபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க இதனை நாமல் ராஜபக்ஸ செய்வதாக தம்மிடம் கூறியதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.-GTN-

பிரபல பாடகர் இராஜ வீரரட்னவும் அவரது சகோதரியும், இது குறித்து மல்சாவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு பெரும்பாலும் உண்மையாக இருக்கக் கூடும் எனவும் ஏனெனில் இராஜூம் நாமலும் நெருங்கிய தோழர்கள் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேறு பூசுவோர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments