-Mohamed Infas-
இதில் நாம் எந்தளவு அசமந்தமாய் இருக்கிறோம், அதில் என்ன என்ன தவறுகள் இது வரை காலமும் செய்து உள்ளோம் என்பதை எல்லாம் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கு மூலம் அறிய முடிந்தது.
கருத்தரங்கை மிகவும் சிறப்பாக கண்டியை பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் நளீம் பதுர்தீன் நடத்தினார்
''படிக்க வேண்டும், உழைக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் , வியாபாரம் செய்ய வேண்டும், வாகனம் எடுக்க வேண்டும்'' என்று பல்வேறு ஆசைகளும் , அபிலாசைகளும் நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை...
ஆனால் இவை அனைத்தையும் இந்த காலப்பகுதிக்குள் செய்ய வேண்டும் எனும் ஒரு ''இலக்கும் திட்டமிடலும்'' நமக்கு உள்ளதா என்று நம்மை நாமே கேட்டு பார்த்தால் விடை ''பூச்சியமே''
நமக்கு இலக்கும் கிடையாது, திட்டமிடலும் கிடையாது செய்வதை செய்கிறோம் இறைவன் நாடினால் கிடைக்கும் இல்லையெனில் கிடைக்காது எனும் மனப்பாங்கில் தான் நம்மில் பலரின் வாழ்க்கை நகர்கிறது
நாம் முயற்சி செய்யாத வரை இறைவனும் உதவ மாட்டான் எனும் விடயத்தை நாம் மறந்து போகிறோம்...
''கனடாவை சேர்ந்த ஒரு சிறுவன் படிக்கும் காலத்தில் இருந்தே அவனுக்கு ஒரு ஆசை வரும் காலத்தில் ஒரு ஒப்பனை கலைஞர் ஆக வேண்டும். இதை வெளியில் சொல்லும் போது சிரிப்பும், கேலியும் பிறக்கிறது ... அவன் என்ன செய்தான் எனில் சோர்ந்து போகவில்லை மனதுக்குள் ஆசையை வளர்த்து கொண்டே இருந்தான்..
கனடா நாட்டு காசோலை(Cheque) போன்று ஒரு மாதிரி காசோலையை உருவாக்கினான் , அதில் அவன் பெயரையும் மிக பெரிய ஒரு தொகையையும் குறித்து கொண்டான், அதற்கு ஒரு திகதியை இட்டான் .. அதன் பின் அதை மடித்து அவனின் ''சட்டை பைக்குள்'' வைத்து கொண்டான் ...
தினமும் அதை எடுத்து பார்ப்பதும், நண்பர்களிடம் அதை காட்டி கதைப்பதுமே அவனின் பணியாக இருந்தது... குடும்பம் நண்பர்கள் அனைவரும் அவனுக்கு ''மூளைக்கோளாறு'' என்றார்கள் மனிதன் அசரவில்லை...
கொஞ்சம் காலம் போன பின்பு அவனுக்கு ஒப்பனை துறையில் சிறிய சிறிய வாய்ப்புகள் கிடைக்கிறது.... அதை செய்து வருகிறான், அப்பொழுதும் அவனின் ''சட்டை பைக்குள்'' அந்த ''மாதிரி காசோலை'' இருக்கிறது...
இப்படியே காலம் போகிறது , அவன் பைக்குள் இருக்கும் காசோலை நாளும் நெருங்குகிறது ..
என்ன ஆச்சரியம் ...!
அவன் பைக்குள் இருக்கும் ''மாதிரி காசோலைக்கு'' சரியாக ஒரு நாளே எஞ்சி இருக்கும் போது கனடாவின் மிகப்பெரிய ஒரு நிறுவனம் அதே தொகைக்கு அவனை ஒப்பனை கலைஞனாய் ஒப்பந்தம் செய்து கொண்டது ....
அந்த இளைஞ்சனின் இலக்கு பொய்க்கவில்லை , அது நனவாகி போனது .. அவனை கேலி செய்தோர் மட்டும் இல்லை இந்த உலகமே அவனை திரும்பி பார்த்தது.
அந்த இளைஞ்சன் வேறு யாரும் இல்லை , அவர் தான் உலக புகழ் பெற்ற நடிகர் ''ஜெம் கெர்ரி( Jim Carrie, Age 53)'
நாம் இலக்குகள் என்ன என்பதை தீர்மானிக்கும் போது , அது எப்படி எனும் கேள்வியை கொண்டு வந்து மனதுக்குள் நுழைக்கும் போது தான் குழம்பி போகிறோம்... பலருக்கும் நடப்பது இதுவே
நமது இலக்கு எது ? என்பதை முதலில் தீர்மானிப்போம் , தொடர்ந்து முயற்சி செய்தால் ''எப்படி?'' என்பதற்கு பதில் தானாகவே கிடைக்கும்.
0 Comments