Subscribe Us

header ads

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பலர் போட்டியிட முன்வந்துள்ளனர்.


பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பலர் போட்டியிட முன்வந்துள்ளனர்.

இதனடிப்படையில் ஐ.தே.க,ஸ்ரீ சுதந்திர கட்சி, ஸ்ரீ மு.கா, அஇமகா , ததேகூ ஆகிய கட்சிகளில் இணைந்து போட்டியிட உள்ளதாக எமது புலனாய்வு ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐதேக சார்பாக அங்குள்ள முன்னாள் பிரதி அமைச்சருடன் இணைந்து முஸ்லீம் பிரமுகர்கள் போட்டியிட உள்ளனர்.தவிர ஸ்ரீ முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக யாழ் மாவட்ட இணைப்பாளர்கள் போட்டியிட உள்ளதாகவும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் உறுதிப்படுத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி சார்பாக பிரபல மௌலவி ஒருவர் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இளம் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அதன் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் அறிய முடிகின்றது.

-Madawala News-

Post a Comment

0 Comments