Subscribe Us

எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு ஒரு சட்டம் சந்திரிக்காவுக்கு ஒரு சட்டமா? பந்துல கேள்வி


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துக்களால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படவில்லையா என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைப்பது சட்டரீதியானது அல்ல என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மனுவை விசாரணைக்கு எடுக்கும் வரை அவரை கைது செய்ய தடுக்கும் உத்தரவொன்று நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டது எனவும் பந்துல குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

நீதிமன்ற நாய் தீர்ப்பொன்றை வழங்கியதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியிருந்ததார். இதனையடுத்து அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திரிக்கா, நீதிபதிகளை பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நபர்கள் என கூறியுள்ளார். எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமுலான சட்டம் ஏன் சந்திரிக்காவுக்கு அமுல்படுத்தப்படவில்லை எனவும் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment

0 Comments