Subscribe Us

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கை!


உலகின் மிக நலிந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைதிக்கான நிதியம் (The Fund For Peace (FFP) வெளியிட்டுள்ளது. 


அவதானத்துடன் இருக்க வேண்டிய 178 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சிறிலங்கா 34வது இடத்திலுள்ளது.

உலகிலேயே மிக நலிவுற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் தென் சூடான் பட்டியலிடப்பட்டுள்ளது. 

இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை முறையே சோமாலியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சூடான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. 

மிக உயர்ந்த நிலைபேண் தன்மை கொண்ட நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. அடுத்து சுவீடன், நோர்வே, டென்மார்க், லக்ஸம்பேர்க், சுவிஸ், ஸர்லான்ட் போன்ற 14 நாடுகள் நிலைத்திருக்கும் நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. 

வருடம் தோறும் இந்த ஆய்வைச் செய்துவரும் இந்த அமைப்பு அந்தந்த நாடுகளில் பல்வேறுபட்ட ஆய்வறிக்கைகள், சுட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. 

Post a Comment

0 Comments