Subscribe Us

இப்படிச் செய்தால் மிக்க சந்தோஷம் அமைச்சரே !!!!!!!!!!!

- jamaldeen mihlar -



கொஞ்ச நாட்களுக்கு முன்பு எல்லா சந்து பொந்துகளில் மட்டும் அல்லாமல் நாடு பூராகவும் பூகம்பம் போல் வெடித்த பிரச்சினையே வில்பத்து. அதற்கு அடுத்து காணப்பட்டது நட்பிட்டிமுனைக் கிராமத்து மக்களின் குடிநீர்ப் பிரச்சினையும் தான் பரவலாக கிட் அடடித்திருந்தது.

ஆம் நட்பிட்டிமுனை மக்களின் பல்வேறு பிரச்சினைகளில் அத்தியவசியமாகத் தெரிந்தது குடிநீர்ப்பிரச்சினையாகும். இக் குடீநீர்ப் பிரச்சினையானது இக் கிராமத்து மக்களின் தசாப்தங்களைக்கடந்தும் இழு பறியாகிக் கொண்டு போய் பல தசாப்தங்களையும் தாண்டி கணப்படுகின்றதொரு பிரச்சினை ஆகும்.


அதாவது இப் பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டும் அப் பிரச்சினையானது அப்பொழுது பதவியில் இருப்பவர்களது என்னம் “செவிடன் காதில் ஊதிய சங்கு” போலவே காணப்பட்டது.

ஆர்ப்பாட்டம் நடத்திய இரு தினங்களுக்கு தன்னீர் தவறாது வரும் பின்னர் “ பழைய குருடி கதவை தொரடி” என்பது தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து கொண்டு வரும். மீண்டும் ஆர்ப்பாட்டம் என்று வரும் தொடர்கதையாக
சரியாக இப்பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் நீரை உரிய நேரத்திற்கு வழங்குவதன் மூலம் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியாது.

ஏனெனில் நட்பட்டிமுனைக் கிராமத்தையும் சேனைக்குடியிருப்புக் கிராமத்தையும் பிரநிதித்துவப் படுத்தி ஒரு நீர்த்தாங்கி உள்ளது. இன் நீர்த்தாங்கியானது இரண்டு கிராமங்களில் வாழ்கின்ற மக்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்நீர் தேவைக்கு குறைவாகவே கிடைக்கின்றது அதாவது “யானைப்பசிக்கு சோளப் பொறி கொடுப்பது போன்று “ காணப்படுகின்றது

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு இப்பிரச்சினையானது நிரந்தரமான தீர்வினை முன் வைக்கும் முகமாக இவ்விரு ஊர்களுக்கும் பொதுவான நாமத்தை சுமந்து கொண்டு இருக்கும் நீர்த்தாங்கியை பிரத்தியேகமாக சேனைக்குடியிருப்பு மக்களுக்கு வழங்குவதும். ந/ முனையைப் பொருத்தவரை அங்கு சுமார் 1284 குடும்பங்களையும் 4532 வாக்காளர்களையும் இயலவே கொண்டதோரு ஊராகும்..

எனவே இது மாத்திரம் அல்லாது இவர்களது எதிர்கால சந்ததி வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நோக்கும் போது இவர்களுக்கு தனித்தே ஒரு நீர்த்தாங்கி நிறுவப்படுவதன் மூலம் இம்மக்களின் பிரச்சினையை ஒழித்து நிரந்தரத் தீர்வினை நிலை நாட்ட முடியும்
எனவே இம்மக்களுக்காக இப்பிரச்சினையை தற்போதைய நீர்வழங்கள் வடிகால் அமைச்சர் செய்து காட்டி குடி நீர்ப்பிரச்சினையை அரசியலாக்கும் அரசியல் வியாபாரிக்கு பதி லடி கொடுப்பாரா??????

BY : SAMZUL A RASHEED

Post a Comment

0 Comments