Subscribe Us

பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் நாமும்...


பாடசாலை முகாமையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவானது அன்பு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்புகளினாலும் கூட்டாக இணைந்து செயற்படுத்த வேண்டிய கடமையுணர்ச்சியினாலும் மிகைக்கும் போதே, அந்நிர்வாகத்தினால் எமது பாடசாலையையும், மாணவர்களையும் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லமுடியுமாக இருக்கும்.
இந்நிலைமைகளை கல்வியமைச்சு ஒழுங்கு செய்து தருவதற்கோ கண்காணிப்பதற்கோ காத்திரமான எந்த ஏற்பாடுகளும் இல்லை. இருந்தும் கல்வியமைச்சினால் SDC என்ற அதிகாரபூர்வ வாயிலொன்று ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. வினைத்திறன் மிக்க விளைவுகளை பெற்றோர்கள் அதனூடு பெற சில கட்டங்களை அவர்கள் கடந்தே வர வேண்டியுள்ளது.
01.மேற்படி SDC (School Development Committee) ஆனது, அதற்குள்ள கடப்பாடுகளையும் அதன் வரையறைக்குட்பட்ட அதிகாரங்களையும் தெளிவாக விளங்கி மிகத் திறமையாக செயற்படுமாயின் குறித்த பாடசாலையை மிக சிறந்த சக்தியாக மாற்றுவது ஒன்றும் கடினமான விடயமாக இருக்கபோவதில்லை. பெற்றோர்களின் முழுமையான ஆதரவுடன் அமையும் பலம் பொருந்திய SDC ஆனது பாடசாலையை நிர்வகிக்கும் பொறுப்புக்கு தலைமையை ஏற்கும்.
Royal Collage மற்றும் D.S.Senanaayaka School போன்றவைகள் தலை நிமிர்ந்து நிற்க உள்வாங்கப்படும் மாணவர்களின் பெற்றோர்களது கல்வித்தகமைகளே முதற்காரணம் என்பதை நினைவிலிருத்திக்கொள்வோம்.
02.மேற்படி தகமையில் SDC தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் பெற்றோர்கள் அனைவரும் SDC இற்குள்ள அதிகாரம், பாடசாலைக்கு செய்யப்பட வேண்டிய கடமைகள் குறித்து தெளிவடைந்திருக்க வேண்டும். ஏனெனில் பெற்றோர்களில் இருந்தே SDC தெரிவு செய்யப்படுகின்றது.

  • ற்றோர்கள் வார்க்கப்பட வேண்டுமாயின். அவர்கள் தெளிவுறுத்தப்பட வேண்டும். பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு பயிற்றுவிக்கப்படுவதற்கு

    • பலரது நேரங்களை செலவழிக்க வேண்டி வரும்,
    • பணங்களும் செலவழிக்கப்பட வேண்டி வரும்,
    • சில வருடங்களையும் விழுங்கும்.

    1. முயற்சியாளர்கள் ஒன்று சேர வேண்டும். பெற்றோர்களை நோக்கிய நகர்வுக்கான திட்டங்கள் தெளிவாக வரையப்பட வேண்டும். அத்திட்டங்களை அமுல் படுத்த உழைக்க வேண்டும்.
    இது தவிர்த்து டீக்கடைகளிலும் இணையத்தளங்களிலும் “பாடசாலை அபிவிருத்திக்காக உழைக்கின்றோம்” என்று கடந்தகால நினைவுகளை மட்டுமே பேசி, அடுத்தவர்களை விமர்சனம் செய்து கொண்டிருப்போர்களை பக்குவமாக உதாசீனப்படுத்த வேண்டும். அவர்கள் அழைத்துச் சென்று பயிற்றுவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சமூகத்துக்கும் உணர்த்த வேண்டும்.
    N.M Saneer

    Post a Comment

    0 Comments