Subscribe Us

header ads

தீவிர வாதிகளை தேடிபிடித்த சவுதி ஆட்சியாளர்கள் குற்றத்தில் தொடர்பில்லாத அவர்களின் குடும்பத்தினருக்கு துணை நின்று சிறந்த முன்மாதியாக மாறியுள்ளனர்!



இந்தியாபோன்ற நாடுகளில் தீவிர வாத தாக்குதலில் தொடர்புடையவானாக ஒருவனை கண்டறிய பட்டால் அதன் விளைவுகளை குற்றம் செயதவன் மட்டும் இன்றி குற்றம் செய்தவனின் சுற்றத்தாரும் குடும்பத்தினரும் கூட சில சமயங்களில் சுமக்க வேண்டிய சூழல் காவல் துறையை சேர்ந்த கயவர்களாலும் இந்துதுவ வெறிபிடித்த ஆட்சியாளர்களாலும் உருவாக்க படுகிறது


மகன் செய்த குற்றத்திர்காக தந்தையை பிடித்து செல்வதும் அண்ணன் செய்த குற்றத்திர்காக தம்பியை பிடித்து செல்வதும் ஒருவன் குற்றம் செய்து விட்டான் என்பதர்காக அவனது குடும்பத்தையும் சுற்றத்தாரையும் குற்ற பரம்பரையாக சித்திரிப்பது இந்தியாவில் சர்வ சாதாரணமான நிகழ்வாகும்

ஆனால் எந்த ஒரு குற்றத்திர்கும் குற்றம் செய்தவனே பொறுப்பாவான் ஒருவன் செய்த குற்றத்திர்காக மற்றவர்களை சந்தேகிப்பதும் தண்டிப்பதும் தவறாகும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடாகும்

இந்த நிலை பாடு குற்றங்களை குறைக்கும் நிலை பாடாகும் தீவிரவாதத்தை வேர்அறுக்கும் நிலை பாடாகும்

ஒருவன் செய்த குற்றத்திர்காக அவனது குடும்பமே சவால்களை எதிர் கொள்ளும் போது செய்யாத குற்றத்திர்காக சவால்களை எதிர்கொள்வதை விட அந்த குற்றத்தை செய்து விட்டு சவால்களை எதிர் கொள்வோம் என்ற எண்ணம் சாதரண மனிதனிடம் வருவதை தவிர்க்க இயாலாது

இந்த மனோ நிலைதான் குற்றங்கள் பெருகுவதர்கும் தீவிரவாதம் வளர்வதர்கும் முக்கிய காரணியாக அமைகிறது

இந்த காரணத்தை சமூக அமைப்பில் இருந்து இஸ்லாம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கிய எறிய சொல்கிறது

இஸ்லாத்தின் இந்த வழிகாட்டுதலை சவுதி அரசாங்கம் அண்மையில் தம்மாம் நகரில் நடை பெற்ற தீவிரவாத தாக்குதலின் போது நடை முறை படுத்தியது .

குற்றம் செய்தவர்களை தேடி பிடித்த சவுதி அரசும் காவல் துறையும் உளவு துறையும் குற்றத்தில் தொடர்ப்பில்லாத குற்றவாளிகளின் உறவினர்களுக்கு எந்த இழுக்கும் இழிவும் இன்னலும் வராமல் பார்த்து கொண்டது

மாறாக குற்றவாளிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் உதவிகளையும் செய்து அவர்களுக்கு மரியாதை செய்தது

அப்படி பட்ட ஒரு நிகழ்வைதான் படம் விளக்குகிறது

ஆம் தம்மாம் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிர வாதியின் குடும்பத்தினரை ரியாத் மண்டல ஆளுனர் சந்தித்து பேசுவதை தான் படம் விளக்குகிறது .

படத்தில் இருப்பவர்கள் எங்களுக்கும் அந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை என்று கூறியதை தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்யும விதமாகவும் அவர்களுக்கு உதவும் விதமாகவும் அவர்களை ரியாத் மணடல ஆளுனர் சந்தித்து பேசினார்


நன்றி  : சையது அலி பைஜி 

Post a Comment

0 Comments