முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திவி நெகும திட்டம் ஊடாக மிக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments