பேஸ்புக் புதிதாக வெளியிட்டுள்ள "மூமென்ட்ஸ்" என்கிற ஆப், போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து நேரடியாக நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
இந்த புதிய அப்ளிகேஷனில் முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து படத்தை டேக் செய்யும் போது, இந்த ஆப் புகைப்பட தொகுப்பை ஸ்கேன் செய்து குறிப்பிட்ட நண்பரின் புகைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுக்க வழி செய்கிறது.
மூமென்ட்ஸ் ஆப் மூலம் தொகுக்கப்பட்ட படங்களை நண்பர்களுக்கு அனுப்பலாம். அந்த நண்பரும் மூமென்ட்ஸ் ஆப் வைத்திருந்தால், அதை பயன்படுத்தி படங்களை பார்க்க முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் அவரின் பேஸ்புக் மெசேஞ்சரில் இருந்து 'மூமென்ட்ஸ்' காத்திருப்பதாக தகவல் கிடைக்கும்.
மேலும் பல 'மூமென்ட்ஸ்' தொகுப்பில் இருக்கும் ஒரு நண்பரை ஸ்கேன் செய்து புதிதாக மற்றொரு மூமென்ட்ஸையும் உருவாக்க முடியும்.


0 Comments