இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வரும் நபர்களில் இரண்டு அரச நிறுவனங்களின் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்து கடந்த வாரம் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வர்த்தக சபை அதிகாரிகளினுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்சந்திப்பின் போது தொடர்ந்து பேசிய ஜனாதிபதி,
இலங்கையில் போதைப் பொருட்களை கொண்டு வந்து அதை விநியோகிக்கும் இடைத்தரகர்களாக இரண்டு அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் செயற்பட்டுவருகின்றமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,
இனிவரும் காலங்களில் வர்த்தகர்கள் எந்தவித அழுத்தங்களுமின்றி சுதந்திரமாக வர்த்தகத்தினை முன்னெடுத்து செல்வதற்கான சூழலினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதனை அரசாங்கம் சரியான முறையில் முன்னெடுத்து வருகின்றது.
அதேபோல விவசாய உற்பத்திகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான உற்பத்திப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
எனினும் அடுத்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு விவசாய உற்பத்திப்பொருட்களை இலங்கையிலேயே உற்பத்தி செய்யவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்படுத்திவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments