(கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)
தொழில் நிமித்தம்
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து கத்தாரில் வாழும் இலங்கையர்களுக்கான மாபெரும்
ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் இன்று (21-06-2015) கத்தார் அசீசியா பகுதியில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை சமூக நலன்புரி
மன்றம் (Srilankan Community Welfare Forum) ஏற்பாடு செய்திருந்த இவ்
ஒன்றுகூடலுக்கு கத்தாரின் நாலாபாகங்களிளிருந்தும் பெருந்திரளானோர்
சமூகமளித்திருந்தனர்.
இதன்போது “2013 ம்
ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு உங்கள் அமைப்பாகும், இலங்கையிலிருந்து கத்தாரை
நோக்கி வந்திறங்கும் ஒவ்வொருவரும் இதன் அங்கத்தவராவர். இறைவனின் உதவியுடன் நிறைய
விடயங்கள் செய்யப்பட்டுள்ளன என்றாலும் நீங்களும் இதன் பயணத்தில் பங்களாராக
வேண்டும், சமூகத்திற்கு செய்யவேண்டியது நிறைய இருக்கின்றது. நாம் அனைவரும்
பொறுப்பாளர்கள்.” மேற்கண்டவாறு உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வுக்கு
கத்தார் அறக்கட்டளை (Qatar Charity) அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.




0 Comments