திர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெ ளி யிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே. புஷ்பகுமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் , ஆகஸ்ட் மாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், புலமைப்பரிசில் பரீட்சையை குறித்த திகதியில் நடத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதால், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் மாதம் 23ஆம் அன்றே அப்பரீட்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments