Subscribe Us

header ads

விரைவில் விற்பனைக்கு வரும் Samsung Galaxy J5 மற்றும் J7


புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கைப்பேசி சந்தையில் சம்சுங் நிறுவனம் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையிலும் விடா முயற்சியாக தொடர்ந்தும் நவீன ரக கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
இதன்படி Samsung Galaxy J5 மற்றும் J7 ஆகிய கைப்பேசிகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இவற்றில் Samsung Galaxy J5 கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1,280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz Quad Core Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 816GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,600 mAh மின்கலம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy J7 கைப்பேசியில் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரை 1.4GHz Marvel PXA1936 Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா, 3,000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments