தற்போது புத்தளம் நகரத்தின் பகுதிகளில் பெய்துவரும் மழையினையடுத்து சில வீதிகளில் மiழை நீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வது தொடர்பில் கண்டறியும் வகையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் இல்ஹாம் மரைக்கார் இன்று காலை சென்று பார்வையிட்டார்.
புத்தளம் 11 ஆம் குறுக்குத் தெரு அசன்குத்தூஸ் பாடசாலைக்கு செல்லும் பாதையில் தொடராக நிர் தேங்கி நிற்பதால் காணப்படும் சீர்கேடுகள் தொடர்பில் இல்ஹாம் மரைக்காரிடம் அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்த வகையில் இதனை பார்வையிட்ட இல்ஹாம் மரைக்கார் மழை குறைவடைந்ததும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையெடுப்பதாக மக்களிடம் தெரிவித்துள்ளார்
0 Comments