Subscribe Us

header ads

அமைச்சர் றிஷாட் அவர்களின் மறிச்சுக்கட்டி மீள்குடியேற்றம் தொடர்பான ஹிரு டீவி நிகழ்ச்சி இன்று காலை மீண்டும் மறுஒளிபரப்பு

-NMCC-


கடந்த ஒரு மாத காலமாக சிங்கள ஊடகங்களில் மிக மோசமாக பேசப்பட்டு வருகின்ற மறிச்சுக்கட்டி பாலைக்குழி கரடிக்குளி கொண்டச்சி காயக்குளி போன்ற கிராமங்களில் மீள்குடியேறி வருகின்ற முஸ்லீம்கள் வில்பத்து தேசிய வனத்தை அழித்து துவம்சம் செய்துவருகின்றார்கள் என்று பெளத்த தேசியவாதிகளும் சிங்கள பிக்குகளும் குற்றம் சாடி வருகின்றார்கள். அவ்வாறே அமைச்சர் ரிஷாட் பதிவுதீனுக்கும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வடக்கு முஸ்லீம்களின் அரசியல் அடித்தளத்தை சிதைக்க திட்டமிட்டு வருகின்றாரார்கள்.

இந்த வேளையில், எதிரிகளின் சவால்களை ஏற்றுக்கொண்டு சிங்கள சூழலியலாளர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நேருக்கு நேரான விவாதத்தில் கலந்துகொண்டு வடக்கு முஸ்லீம்கள் தமது சொந்தக் காணிகளிலே மீள்குடியேறி உள்ளார்கள் என்ற உண்மையை உலகுக்கு இடித்துரைத்த ஹிரு தொலைக்காட்சியின் பலய எனும் நிகழ்ச்சி மீண்டும் இன்று 24-05-2015 காலை 11.30 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

சிங்கள தீவிரவாதிகள் முஸ்லிம்களை குறிவைக்கின்ற முஸ்லிம்களது இருப்பில் கைவைக்கின்றமிலேச்சத்தனத்தையும் தந்திரத்தையும் எதிர்த்து நேருக்கு நேர் முகம் கொடுத்து நமது அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் எதிரிகளின்  கேள்விகளுக்கு சளைக்காது தைரியமாக பதில்கொடுப்பதை நாம் இந்த நிகழ்ச்சியில் கண்டுகொள்ள முடியும்.

Post a Comment

0 Comments