-K.first Group-
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட கல்பிட்டி சிந்தாத்திரி மாதா சிங்கள
ஆரம்ப பாடசாலையின் தற்போமைய நிலை தொடரைபாக பெற்றார் மத்தியில் பலத்த விமர்சனங்கள் முக்வைக்கப்பட்டு
வருகின்றன.
இப்பாடசாலை ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மல
மாதா சிங்களப் பாடசாலையிலிருந்து பிரிக்ப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். உள்ளுர் மற்றும் மகாணசபை,
பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்திற்கும் சுயநல அரசியல் இருப்புக்காகவும்
இப்பாடசாலை தூரநோக்கற்ற வகையில் ஆரம்பிக்கப் பட்டமையால் இன்று தரம் 1, 2 இற்குரிய 190 மாணவர்கள் தமது உயிரை பணயம் வைத்து கல்வி
பயிலும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இப்பாடசாலை சுற்றியும் வகுப்பறைகளுக்குள்ளும் நீர் தேங்கி
நிற்பதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் அடிக்க இடை நிறுத்தப் படுகின்றன. தம்மன்னா ஓடையின் ஒரு பகுதியை
நிறைத்து இப்பாட சாலை அமைக்கப் பட்டிருப்பதால் வற்றுப் பெருக்கின் போதும் நீர் நிறைந்தாக
இப்பாடசாலை காணப்படுகின்றது.
இப்பாடசலை அமையப்பெற்றுள்ள இடம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால்
பாடசாலை அமைப்பதற்குரிய பொருத்தமான சூழலைக் கொண்டிருக்கவில்லையெனவும், சிறுவர்களின் பாதுகாப்புக்கு
பொருத்தமற்ற தெனவும் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதும் அரசியல் வாதிகளின் குறுகிய புத்தியின்
காரணமாக இவ்விடத்திலேயே பாடசாலை அமைக்ப்பட்டமை தொடர்பில் பெற்றார்கள் கவலையும் விசனத்தையும்
தெரிவித்து வருகின்றனர். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின்
மேற்படி சிபாரிசுகள் கல்பிட்டி பிரதேச செயலாளரால் வலயக் கல்விப் பணிமனை, மாகாணக் கல்விப்பணிமனை என்பவற்றுக்கு அனுப்ப்பட்டிருந்தும் இப்பாடசாலை ஒரு
சிலரின் தேவைகளை மட்டும் முதன்மைப்படுத்தி அரசியல் அதிகார பலத்தைக் கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளமை
கல்பிட்டிப் பிரதேச இளஞ்சிறார்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டதாகவே
இப்பெற்றோர்கள் கவலை கொண்டுள்ளனர்.
தற்காலிக ஓலைக் கொட்டகையில் இயங்கும் இப்பாடசாலைக்கு நிரந்தரக்
கட்ட்டங்களையும், ஏனைய வசதி வாய்ப்புக்களையும் குறுகிய காலத்தினுள் ஏற்படுத்தித் தருவதாக வாக்களித்தோர்
இன்று இப்பாடசாலையை ஏரெடுத்தும் பார்ப்பதில்லையெனவும் – பெற்றார்களின்
முயற்சியால் கட்ட்டமொன்றை நிருமானிப்பதற்கு முயற்சித்து தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின்
ஆலோசனைப் பெறப்பட்டபோது – உவர்த் தன்மைமிக்க நிலப்பரப்பிலுள்ள
இப்பாடசாலையில் நிரந்தரக் கட்ட்டங்கள் –சுற்று மதில்கள் அமைப்பதாயின் விசேட தொழில்நுட்ப முறைகளைக் கையாள
வேண்டுமெனவும், அதற்கான செலவு மதிப்பீடுகள் மிகப் பாரிய தொகையுடையதெனவும்,
அத்தகைய தொகையை செலவிடுவதை விட வேறு இடத்தை தெரிவு செய்வதே மிகப் பொருத்தமானதும்
அறிவார்ந்த செயலுமாகும் என சிபாரிசு செய்துள்ளமையால் பெற்றார்கள் தமது பிள்ளைகளுக்கு
நல்லதொரு கற்றல் சூழலைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
இதேவேளை நிர்மல மாதா சிங்களப் பாடசாலைக்குள் இவ்விரண்டு வகுப்புக்களையும்
நடாத்துவதற்கான வசதிகள் காணப்படுகின்ற போதிலும் ஆயிரம் பாடசாலைத்திட்டத்திற்கமைவாக
இதனை நடைமுறைப்ப டுத்தமுடியாத நிலையுள்ளதாகவும் – இவ்விடயத்தில் கல்வி அதிகாரிகளும் அசமந்தமாக
செயற்படுவதாகவும் பெற்றார்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி விடயங்களை பெற்றார்களின் சார்பில் சரத்சந்திரரத்ன அவர்கள்
முன்வைத்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் உரிய கவனமெடுத்து தமது பிள்ளைகளுக்கு
நல்லதொரு தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய அழுத்தங்களை சகலரும் இணைந்து வழங்க வேண்டுமென
சகல பெற்றார்களின் சார்பிலும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறார்.




0 Comments