//அப்துல் கலாமை இதுவரை எந்த இஸ்லாமிய இயக்கமும் ஏன் கௌரவிக்கவில்லை, ஏன் அவரை பா. ஜ.க வினர் கௌரவிக்கிரார்கள்???// -சென்னி மலை
அப்துல் கலாமை ஒரு சிறந்த இந்தியனாக முஸ்லிம்கள் பாராட்டவே செய்தனர். ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் அவரை தனிப்பட்ட முறையில் கௌரவிக்காததற்கு காரணம் உள்ளது. அவர் சிறந்த இந்தியனாக இருந்தார். ஆனால் சிறந்த இஸ்லாமியராக இல்லை. பெயரைத் தவிர வேறு எந்த இஸ்லாமிய அடையாளமோ நடவடிக்கையோ அவரிடம் இல்லை. இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் ஹஜ் செய்யவில்லை. நபிகள் நாயகம் வலியுறுத்திய திருமணத்தை முடிக்கவில்லை.
பிஜேபி கௌரவிப்பதற்கான காரணம் அப்துல் கலாம் இஸ்லாத்தை துறந்து இந்து மத சடங்குகளை பார்பனியத்தை சுவீகரித்தக் கொண்டதால். ஆர்எஸ்எஸ் வைக்கும் கோரிக்கையும் இதுதானே... 'நீங்கள் அல்லாவையும் வணங்கிக் கொள்ளுங்கள். அதோடு ராமனையும் வணங்கிக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் இஸ்லாமியர்களை நாங்கள் அரவணைப்போம்' என்று தானே சொல்கிறார்கள். அதனை அப்துல் கலாம் சிறப்பாக நிறைவேற்றுகிறார். எனவே வாஜ்பாய் முதல் அத்வானி வரை அவரை போற்றுகின்றனர்: புகழ்கின்றனர். தனது இஸ்லாமிய நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டதாலேயே அவரை ராக்கெட் தொழில் நுட்பத்துக்கு தலைவராகவும் ஆக்கினர் இந்துத்வாவாதிகள். பின்னர் ஜனாதிபதியாகவும் ஆக்கினர். உலகில் கிடைக்கும் அற்ப புகழுக்காக அழகிய மார்க்கத்தை அப்துல் கலாம் தூற எறிந்தார். இதனால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த நட்டமும் இல்லை.
மாறாக நாளை இறப்புக்கு பின்னால் 'உலகில் எத்தனையோ பேர் வறுமையில் வாட உன்னை ராக்கெட் தொழில் நுட்ப அறிவைக் கொடுத்து அதன் தலைவனாகும் தகுதியையும் கொடுத்தேன். யாருக்கும் எளிதில் கிடைத்து விடாத இந்தியாவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பையும் வழங்கினேனே! அதற்கு நன்றிக் கடனாக என்னை வணங்கினாயா? எனக்கு நன்றி செலுத்தினாயா?' என்று இறைவன் கேட்டால் என்ன பதிலை திரு கலாம் அவர்கள் தரப் போகிறார்கள்?
இவர் இறந்தவுடன் அரசு மரியாதையோடு பீரங்கிகள் முழங்க உடல் அடக்கம் நடைபெறும். அதன் பிறகுதான் அவரது நிரந்தர வாழ்வே துவங்குகிறது. 'அக்னி சிறகுகள்' என்ற அவரது நூலில் பல குர்ஆன் வசனங்களையும் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய தாய் தந்தைக்கு பிறந்து குர்ஆனையும் விளங்கிய இவர் ஐந்து வேளை தொழுகையையும் கடை பிடித்து மனிதர்களை வணங்காமல் நமது நாட்டுக்காக சிறந்து உழைத்திருப்பாரேயானால் அவரது இரு உலக வாழ்வும் சிறப்பானதாக இருந்திருக்கும்.
ஏனெனில் ஒருவனின் தாய் மொழியையும், தாய் நாட்டையும் நேசிக்க குர்ஆன் எந்த வகையிலும் தடை சொல்லவில்லை. அனைத்து பாவங்களையும் மன்னிப்பேன். ஆனால் எனக்கு நிகராக எவரையும் வணங்கினால் அந்த பாவங்களை நான் மன்னிக்க மாட்டேன் என்று இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்.
ஆனால் திரு கலாமோ தன்னை இந்து மதத்தின் பற்றாளராக மீடியாக்களுக்கு காட்டிக் கொள்வதில்தான் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். இப்படி காட்டிக் கொண்டால்தான் தனக்கு உயர் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். அவரை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. அது அவருடைய விருப்பம். அவர் நல்லவரா? கெட்டவரா? அவருக்கு சொர்க்கம் கிடைக்குமா? நரகம் கிடைக்குமா? என்ற அய்வுகளும் என்னைப் பொருத்த வரை தேவையில்லாதது. அவருக்கும் இறைவனுக்கும் உள்ள கணக்கு அது. எனவே முஸ்லிம்கள் அப்துல் கலாமிடமிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.
இதை வாசிக்கும் அப்துல் கலாமின் நண்பர்கள் இந்த பதிவை அவரின் கவனத்தக்கு கொண்டு சென்றால் நல்லது. வரும் காலத்திலாவது ஏகத்துவத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு கடைசி காலங்களை பயனுள்ள வழியில் செலவழிப்பாராக!
நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்:
இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. அவற்றில் அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி (6514)
நன்றி : சுவனப்பிரியன்
1 Comments
Only Allah knows about Abdul Kalam rest just shut your shit and wait.
ReplyDelete