மின்சார நாற்காலிக்கு செல்ல அஞ்சாதவர்கள் நீதிமன்றம் செல்ல அஞ்சுகின்றார்கள் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி உடுநுவரவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் மின்சார நாற்காலி தண்டனையை அனுபவிக்க அஞ்சப் போவதில்லை என சூளுரைத்தவர்கள் இன்று பொலிஸ் நிலையத்திற்கும் நீதிமன்றிற்கும் செல்ல அஞ்சுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு சில் ஆடைகளை விநியோகிக்க ரெலிகொம் நிறுவனத்தின் 600 மில்லியன் ரூபா எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒட்டுமொத்த இலங்கைக்கும் 100 மில்pலியன் ரூபா பணம் போதுமானது. மிகுதி 500 மில்லியன் ரூபாவிற்கு என்னவாயிற்று?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றயீட்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments