இந்நாட்டின் முன்னணி நகர்ப்புற மருந்தாக்கல், ஆரோக்கியம் மற்றும் அழகு போன்றவற்றுக்கான சில்லறை வர்த்தக தொடரான ஹெல்த்கார்ட் பார்மசி லிமிடெட் நிறுவனமானது தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள அதன் மீள் வடிவமைக்கப்பட்ட காட்சியறையை அண்மையில் திறந்து வைத்தது.
இந்த காட்சியறையின் திறப்பு விழாவில் யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவி ஷாஷியா ஷயீட், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் குழு தலைவர் முனிர் ஷயீக், சன்ஜீவ் சமரநாயக்க, முகாமைத்துவ பணிப்பாளர், ஹேமாஸ் பார்மகியுட்டிகல்ஸ், ஜி.சதாசிவம், ஸ்தாபகர் தலைவர், சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா, விஷ் கோவிந்தசாமி, குழும முகாமைத்துவ பணிப்பாளர் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஷியாம் சதாசிவம், முகாமைத்துவ பணிப்பாளர், சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா நிறுவனம் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த இந் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷியாம் சதாசிவம், “சுகாதார பராமரிப்பு வர்த்தகம் தொடர்பான எமது கண்ணோட்டமானது வெறும் மருந்துகள் தொடர்பான குறுகிய கவனத்திற்குள் மாத்திரம் வரையறுக்கப்பட்டில்லை. எம்மைப் பொறுத்தவரை சுகாதார பராமரிப்பு வர்த்தகம் என்பது நலமுடன் வாழ்தல்(நல்வாழ்வு) மற்றும் சிறப்பாக தோற்றமளித்தல்(அழகு) ஆகியவற்றை மேம்படுத்துவதை குறிக்கிறது” என்றார்.
சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹெல்த்கார்ட் ஆனது தெற்காசியாவில் சுகாதார பராமரிப்பு சில்லறை வர்த்தகத்தில் முன்மாதிரியாக திகழ விரும்பும் குறிக்கோளுடன் கடந்த 2004ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. இன்று மேல்மாகாணம் முழுவதும் உள்ள 17 பார்மசிகள் வலையமைப்புடன்இ ஹெல்த்கார்ட் பார்மசியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு பரந்துபட்ட உற்பத்திகளை வழங்குவதனூடாக வித்தியாசமான ஷொப்பிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
“எமது வழங்கல்கள், வடிவமைப்பு மற்றும் தீர்வுகள் ஆகியன சாதாரண பார்மசியை விட சிறப்பாக அமைய வேண்டும் என்பதே எமது வர்த்தக மாதிரியின் நோக்கமாக அமைந்துள்ளது. இது மக்களை “நோயிலிருந்து மகிழ்ச்சி நோக்கி” கொண்டு செல்வதைப் பற்றியதாகும். இதன் காரணமாகவே, எமது 17 காட்சியறைகள் ஊடாக எமது மக்களுக்கு சுகாதார பராமரிப்பு தீர்வுகளை அணுகுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்” என ஷியாம் தெரிவித்தார்.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காட்சியறையானது நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை நாடும் மக்களுக்கு சிறந்த இடத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காட்சியறையில் வர்ணமயமான அழகுசாதனங்கள், வாசனைத் திரவியங்கள், மூக்குக் கண்ணாடிகள் மற்றும் கைபேசி கருவிகள் போன்ற பரந்தளவிலான வர்த்தகநாமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சௌகரியம் மற்றும் சொகுசான ஷொபிங் அனுபவத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.
இந்த புதிய காட்சியறையில் அனைத்து உற்பத்திகளும் இலகுவான, சீரான முறையிலும், கலையார்வத்தை வெளிப்படுத்தும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலதிக கவுண்டர்கள் விரைவான சேவை மற்றும் மகிழ்ச்சியான ஷொபிங் அனுபவத்தை வழங்குகிறது.
மறு வடிவமைக்கப்பட்ட இந் நிலையத்தின் அங்குரார்ப்பணம், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் வர்ண அழகுசாதன வரம்புகள், சுகாதார பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்பு தொடர்பான கவனத்துடன் ஒன்றிணைந்துள்ளது. இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பனை மற்றும் சரும பராமரிப்பு உற்பத்திகள் தொடர்பில் அழகுசாதன ஆலோசகர்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
மாறுபட்ட உள்ளக காட்சியறை அனுபவத்தை வழங்கும் ஹெல்த்கார்ட் காட்சியறையின் மூலம் இலங்கையில் இதுவரை எந்தவொரு பார்மசியிலும் அனுபவித்திராத சுய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. உள்நாடு மற்றும் சர்வதேச அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு உற்பத்திகளை வழங்கிவரும் மருந்தகமான ஹெல்த்கார்ட் நிலையமானது நாட்டின் சுகாதார பராமரிப்பு வர்த்தகத்தில் சிறந்த அளவுகோலாக விளங்குகிறது.
இந் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மீதான ஈடுபாடு மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியன வேகமான வளர்ந்து வரும் விசுவாசமிக்க வாடிக்கையாளர்கள் ஊடாக விற்பனை உயர்வடைந்துள்ளதுடன்இ ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறப்பான இடமாக ஹெல்த்கார்ட் நிலையத்தினை உறுதி செய்துள்ளது.


0 Comments