Subscribe Us

header ads

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்கின்ற போது அதற்கு எதிராக செயற்படும் சக்திகளின் பலய நிகழ்ச்சி

-புதுமை நம்பி-


வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்கின்ற போது அதற்கு எதிராக செயற்படும் சக்திகளின் முகத்திரையினை கிளித்தெறியும் வகையில் கடந்த 21.05.2015 அன்று ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொண்ட பலய நிகழ்ச்சி அமைந்திருந்தாகவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாற்று கருத்துக்களை கொண்டுள்ளதை இதன் போது காணமுடிந்ததாக வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

முசலி மற்றும் மாந்தை பிரதேச செயலகப் பிரிவில் இடம் பெறும் முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றத்தை பிழையாக ஊடகங்கள் சில காண்பித்து வருவதால் இப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுவருகின்றனர்.கடும் போக்கு பௌத்த சிங்கள அமைப்புக்கள் முசலிக்கு படையெடுத்து மக்களை அச்சம் கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 25 வருடங்களின் பின்னர் தமது மண்ணுக்கு மீள குடியமர வருகின்ற போது இந்த மக்களது தேவைகள் தொடர்பில் கண்டறிந்து அதனை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்த மாவட்ட மக்கள் பிரதி நிதிகளின் பொறுப்பாகும்.சில அரசியல் வாதிகள் அதனை மறந்து செயற்படுகின்ற போது,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இதனை ஒரு சமூக கடமையாக நோக்கி செயற்படுகின்றதை தாங்கிக் கொள்ள முடியாத இனவாதிகள் சழல ஊடங்களை வைத்துக் கொண்டு பொய்யினை விதைக்க முற்படுகின்றனர்.

எத்தனை பொய்களை இந்த ஊடகங்கள் சொன்னாலும்,அது ஒரு போதும் உண்மையாகப் போவதில்லை.நேற்றைய தொலைக்காட்சி விவாத்த்தின் போது பல மாவட்டங்களில் சிங்கள மக்கள் எவ்வித அனுமதியுமின்றி குடியேற்றப்பட்டுள்ளனர்.இது திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றம் என்பதற்கு போதுமான ஆதரங்கள் இருந்த போதும் இது தொடர்பில் மறைத்துவாசிக்கும் சுற்றாடல் ஆர்வளர்கள் என்று கூறும் சில ஏஜண்டுகள் இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு மட்டும் சுற்றாடல்,புராதன சுற்ற்றிக்கைகளை  காண்பிக்கின்றனர்.

இதிலிருந்து இவர்கள் செயற்பாடுகளை எம்மால் அறிந்து கொள்ள முடி கின்றது.இவ்வாறானவர்களின் இந்த பிழையான நோக்கத்தினை அடைந்து கொள்ள முடியும் என்று கருதிய போதும்,அதற்கு எதிராக வன்னி மாவட்ட மக்களினால் விரும்ப்ப்படும் அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் ஹிரு தொலைக்காட்சி விவாத்த்தில் அளித்த விளக்கத்தால் இந்த கயவர்கள் வாயடைத்து போன காட்சி இந்த முஸ்லிம்களுக்கு பெரும் தையரித்தை வழங்கியுள்ளது.

எத்தனையோ முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் வாதிகள் இருந்த போதும்,அவர்கள் வாய் பேசாமல் மௌனித்து மரணித்து போய்விட்டார்களா ? என்று கேள்வி எழுப்பும் நிலை தோன்றியுள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம்,அதாவுல்லா,பௌசி போன்ற முஸ்லிம்களின் அரசியல் தலைமைகள் எதற்காக மௌனம் சாதித்து நிற்கின்றனர் என்பது புரியாத்தொன்றல்ல,இந்த மனிதர்களுக்கு மத்தியில் துணிந்து சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்ற போது அதற்காக அல்லாஹ்வை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தும் உண்மையினை உணர்வுள்ள ஒரு தேசிய தலைவராக றிசாத் பதியுதீன் நேற்று செயற்பட்டதை நாம் பாராட்டுவதுடன்,அவருக்காக இறை பிரார்த்தனைகளை செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும் என்பதை உணர்த்தவிரும்புகின்றேன்.

எது எப்படி இருந்தாலும் மன்னார் மட்டுமல்ல வ்வுனியா மக்களது காணிகளை பெற்றுக் கொடுப்பதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்பது இந்த நுற்றண்டில் எந்தவொரு அரசியல் வாதியும் செய்து காட்டாத ஒரு சாதைனையினை அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்து காட்டியதை நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

எது எவ்வாறாக இருந்தாலும் அனைத்து சமூகங்களையும் பிரதி நிதிகாளக கொண்டு செயற்படும் எமது வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம் சிறுபான்மை சமூகங்களுக்கு  அநியாயாம் இழைக்கப்படுகின்ற போது அதற்காக குரல் கொடுத்துவந்துள்ளதை நினைவுபடுத்துவதுடன்,எதிர் காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தமது முழுயைமான பங்களிப்பினை வழங்குவதற்கு எமது ஒன்றியம் தயாராக இருப்பதாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-Irshad Rahumadullah-

Post a Comment

0 Comments