தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி கீரை - 1 கட்டு 
தேங்காய் பால் - அரை கப் 
சீரகம் - 1 ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 10 
ப.மிளகாய் - 2 
கடலை பருப்பு - 1 ஸ்பூன் 
உப்பு - சுவைக்கு 
எண்ணெய் - 1 ஸ்பூன் 

செய்முறை :

• மணத்தக்காளி கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து கழுவி வைக்கவும். 

• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

• கடலை பருப்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும். 

• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், ப.மிளாயை போட்டு நன்றாக வதக்கவும். 

• வெங்காயம் வெந்ததும் கீரையை போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 

• கீரை வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி 20 விநாடிகள் கொதிக்க விடவும். 

• கடைசியாக வறுத்து பொடித்த கடலைப்பருப்பை போட்டு நன்றாக கிளறவும். 2 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.. 

• சுவையான மணத்தக்காளி கீரை தேங்காய் பால் சாறு ரெடி.