நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிக நீண்ட நாட்களாக நற்பிட்டிமுனை கிராமத்தின் பக்கம் தலைவைத்துக்கூட தூங்கவில்லை என நினைக்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சென்ற மாகாணசபைத் தேர்தலுக்கு அரைமணித்தியாலம் தங்கிச் சென்றவர் அதற்கு பின்னர் மாநகர சபைத் தேர்தல் ஜனாதிபதி தேர்தல் என தேர்தல்கள் நடைபெற்றுள்ள போதிலும், தே ர்தல் காலங்களில் கூட வரவில்லை ....
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட் பதியுத்தீன் அண்மையில் இங்கு வந்து பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கிச் சென்றார் மக்களெல்லாம் நம்பினார்கள் ஏதோ நடக்கப் போகிறது என்று எதுவும் நடக்கவில்லை..
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா இங்கால பக்கம் வருவதே இல்லை ..
இவர்கள் மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், யாரையும் காணவில்லை.
" மைத்திரி யுகம் " உதயமாகி நூறுநாட்கள் கடந்து விட்ட நிலையில் எந்தவொரு வேலைத்திட்டமும் இங்கு நடைபெறவும் இல்லை ஆரம்பிக்கப்படவும் இல்லை.
முகநூலில் பார்க்கின்ற போது அங்க பார்வையிட்ட இங்க பர்வையிட்ட
அந்த அபிவிருத்தி இந்த அபிவிருத்தி
அத திறந்த இத திறந்த...
இந்த மக்களின் பிரச்சினைகள் தீர்த்த ..
அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்த்த
அங்க இவ்வளவு ஒதுக்கீடு..
இங்க இவ்வளவு ஒதுக்கீடு ...
என்றெல்லாம் சுயவிளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்..
ஆனால் நற்பிட்டிமுனைக்கு மட்டும் எதுவும் இல்ல...
இந்த மக்கள வந்து பார்க்கிறுமில்ல...
உதவி செய்றது மில்ல....
தேர்தல் வந்தவுடன் மூட்ட முடிச்சுகளுடன்....இங்க வருவாங்க...
ஆனைய பூனையாக்குவம் என்பாங்க
பூனைய புலியாக்குவம் என்பாங்க..
கடைசியில ஒரு புழியங்காவும் இல்ல...
அந்த நேரம் எங்கிருந்துதான் பாசம் வருகிறதோ தெரியல்ல...
எல்லோரயும் அழைப்பாங்க பழய உறவ புதுப்பிப்பாங்க..
போதாக் குறைக்கு தலைவர் கனவுகண்ட ஊர் என்பாங்க...
முஸ்லிம்களின் உரிமை என்பாங்க
பள்ளிவாசல உடைச்ச என்பாங்க...
ஆள ஆள் துரோகி என்பாங்க விரோதி என்பாங்க...
சென்ற முற அபிவிரித்தி செய்ய மகிந்த விடல்ல என்பாங்க...
முதலமைச்சர் கவர்னர் நம்மட ஆளில்ல என்பாங்க...
என ஏகப்பட்ட வாதங்களையெல்லாம் வைத்து அழுவாங்க பாசாங்குக்கு தொழுவாங்க....
தேர்தல் முடியும்வரை நான் மறக்க மாட்டன் என்பாங்க.
தொலைபேசி ஒரு வெல்லுடன் தூக்கி பதறி அடித்து கொண்டு பதில் சொல்லுவாங்க....
தேர்தல் முடந்த பின்னர் யாரையும் காணக்கிடைப்பதுமில்லை.....
சந்திக்க முடிவதுமில்லை....
பாவம் வாக்களித்து ஏமாந்து பழக்கப்பட்ட மக்கள் ...
அடுத்த முறையும் ஒரு தேர்தலை காத்திருக்கிறார்கள்
0 Comments