தனது இரு பேரப் பிள்ளைகளையும் யாசகத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் முதியவர் ஒருவரையும் அவ்விரு குழந்தைகளையும் பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று பேராதனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த முதியவர் தொடர்பிலும் அவரது பேரப்பிள்ளைகள் குறித்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1229 அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலை அடுத்தே, அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெலிஓயா, பாஹின்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது மகளையும் 6 மகனையும் கைவிட்டுவிட்டு வேறு நபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட தாய், தற்போது பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்து வருகிறார்.
அக்குழந்தைகளை அவர்களது தந்தையும் கவனிப்பதில்லை. தன்னாலும் அக்குழந்தைகளைக் கவனிக்க முடியாதுள்ளது எனத் தெரிவித்த மேற்படி முதியவர், தனது மனைவியும் சுகவீனமுற்ற நிலையில் படுக்கையில் இருப்பதாலேயே குழந்தைகளுடன் யாசகத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.


0 Comments