இனப்பரம்பல் பிரச்சினையை கையாளும் வகையில் நாட்டில், சனத்தொகை அதிகரிப்பை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நாட்டின் பல இடங்களில் இன்று சிங்கள சனத்தொகையின் அளவு குறைந்துள்ளது.
இந்தநிலையில் பிராந்தியங்கள் இனத்துவ அடிப்படையில் நோக்கப்படக்கூடாது.
அனைத்து மதங்களுக்குமான திருமண சட்டங்கள் சமமாக இருக்கவேண்டும்.
இதேவேளை, தமது அரசியல் கட்சியின் மூலம் இது தொடர்பான யோசனைகளை ஏனைய கட்சிகளுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சிக் கொள்கையின்படி ஒரு சிங்கள குடும்பத்தில் ஒருவாக்கு தமது கட்சிக்கு கிடைக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தேரர் கூறினார்.


0 Comments