தொழில்நுட்ப பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகளை ஆரம்பிக்க 12 பல்கலைக்கழகங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்கமைய குறித்த பல்கலைக்கழங்களில் அடுத்த வருடம் முதல் தொழில்நுட்ப
பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர
வகுப்புக்கான தொழில்நுட்ப பிரிவில் மாணவர்கள் தற்போது கல்வி கற்று
வருகின்றனர்.
அவர்களில் சுமார் 2500 மாணவர்களை அடுத்த வருடம் பல்கலைக்கழங்கங்களுக்கு
சேர்த்துக்கொள்ள உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்
தலைவர் பேராசிரியர் கலாநிதி மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.


0 Comments