Subscribe Us

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஈ.எம். ஹனீஃபா வஃபாத்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!


இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்கள் இன்று (08.04.2015 புதன்கிழமை) இரவு 8:00 மணியளவில் சென்னை, கோட்டூர் சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு வயது 96.

இசை முரசின் வரலாற்றுச் சுருக்கம் இணைப்பில் காண்க.....

இன்ஷா அல்லாஹ் நாளை (09.04.2015 வியாழக்கிழமை) நாகை மாவட்டம், நாகூர் தர்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (10.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்....

மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ - தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்


மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
--------------------------------------------------
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live
ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12




Post a Comment

0 Comments